பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் ஷ்யாம் திடீர் மரணம் – திரையுலகினர் அதிர்ச்சி

பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் ஷ்யாம் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 63. பாலிவுட்டில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், கடந்த 2008-ம் ஆண்டு வெளியாகி ஆஸ்கர் விருது வென்ற ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.‘மன் கீ அவாஸ்’ எனும் தொலைக்காட்சி தொடரில் இவரது கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது. தற்போது அந்த தொடரின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதனிடையே கடந்த வாரம் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.இதையடுத்து மும்பை கோரேகான் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு பாலிவுட் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *