கொரோனா தொற்றால் இயக்குனர் தாமிரா, கே.வி.ஆனந்த், நடிகர் பாண்டு என சிலர் இறந்தும் போய் உள்ளனர்.அந்த வகையில், தற்போது நடிகர் ஜோக்கர் துளசி கொரோனாவால் உயிரிழந்துள்ளார். மருதுபாண்டி, உடன்பிறப்பு, தமிழச்சி, இளைஞரணி, அவதார புருஷன் போன்ற படங்களில் நடித்துள்ள இவர், சின்னத்திரையிலும் கோலங்கள், வாணி ராணி, கேளடி கண்மணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.