இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக சுகாதாரப்பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். மேலும், நடிகர் கமல்ஹாசன், மோகன் லால் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டு வரும் நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் இன்று கொரோனா தடுப்பு ஊசியை போட்டுக் கொண்டார்.இது குறித்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்து, இன்று நான் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டேன். அதேபோல் அனைவரும் எடுத்துக் கொள்ளுங்கள் தாமதம் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
I took it today. Don’t delay. pic.twitter.com/eH92mKYQp9
— Harris Jayaraj (@Jharrisjayaraj) March 19, 2021