ரஷியாவின் கசாமில் உள்ள பள்ளியில் இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக அங்குள்ள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.மேலும் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற நேரத்தில் பயந்த நிலையில் இரண்டு குழந்தைகள் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து இறந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக 19 வயது வாலிபரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
