இலங்கையில் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அசாத்சாலியின் வாகனத்திலிருந்து கைத்துப்பாக்கியொன்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியொன்றை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.கொள்ளுப்பிட்டியில் நேற்று மாலை அசாத்சாலியை கைதுசெய்தவேளை அவரது வாகனத்தை சோதனையிட்ட பொலிஸார் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியை மீட்டுள்ளனர் என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் இது குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார்.