யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்து முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தகர்த்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் இருவர் பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் நேற்றைய தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு இவர்களை கைது செய்த பொலிஸார் இன்று நீதவான் முன்னிலையில் முற்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான வழக்கு எதிர்வரும் 4 ஆம் மாதம் 29 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.