நிவாரண நிதி வழங்கிய டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன்

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் உலகெங்கும் உள்ள தமிழர்கள் தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது நேரடியாக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதி மூலமாகவோ நிவாரண உதவி வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து பல்வேறு திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த தொகையை நிவாரணமாக வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் அர்ஜுனா விருது சென்ற தமிழக டேபிள் டென்னிஸ் வீரரான சத்யன் ஞானசேகரன், முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார். இந்த ஆண்டு ஜூலை மாதம் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் விளையாட சத்யன் ஞானசேகரன் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *