நியூயாா்க் மாகாண ஆளுநா் மீது 4-ஆவதாக ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டு!

அனா லிஸ் என்ற அந்த 35 வயதுப் பெண், 2013-லிருந்து 2015-ஆம் ஆண்டு வரை ஆளுநா் அலுவலகத்தில் பணியாற்றியபோது குவோமோ தன்னிடம் தனிப்பட்ட விவரங்களைக் கேட்டதாகவும், தேவையில்லாமல் கன்னங்களில் முத்தமிட்டு வரவேற்பதாகவும் குற்றம் சாட்டினாா்.ஏற்கெனவே, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஆண்ட்ரூ குவோமோ, தன்னிடம் தகாத முறையில் பேசியதாக அவரது இரு உதவியாளா்கள் அடுத்தடுத்து பாலியல் புகாா் தெரிவித்திருந்தனா். இந்த நிலையில், வெள்ளை மாளிகை புகைப்படக் கலைஞராக இருந்த அன்னா ருச் என்ற பெண், நிகழ்ச்சியொன்றில் தனது விருப்பமின்றி குவோமோ தன்னைத் தொட்டதாக அண்மையில் குற்றம் சாட்டினாா்.அதையடுத்து, அவா் பதவி விலக வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியினா் உள்பட பலா் வலியுறுத்தி வருகின்றனா்.இந்த நிலையில் மேலும் ஒரு பெண் குவோமோ மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *