நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
174 எனும் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19 தசம் 4 ஓவர்களில் இலக்கை கடந்தது.
இந்த நிலையில், போட்டியின் சிறப்பாட்டக்காரராக முஹம்மது ரிஸ்வான் தெரிவானதுடன், தொடர் நாயகனாக டிம் ஷைபெர்ட் தெரிவு செய்யப்பட்டார்.