இன்றுடன் கொரோனா வைரஸ் அரக்கனின் பிடியில் சிக்கி அபாயகரமான ஆண்டான 2020 விலகி, 2021-ம் ஆண்டு பிறக்க இருக்கிறது.
எப்போதும் உலகிலேயே நியூசிலாந்தில்தான் முதன்முதலாக புத்தாண்டு பிறக்கும். அந்த வகையில் நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது.
நியூசிலாந்து மக்கள் வாணவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்றனர்.
உலகம் முழுவதும் உள்ள மக்கள் 2021-ம் ஆண்டாவது சிறப்பாக அமைய வேண்டும் என்ற நம்பிக்கையில் புத்தாண்டை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.