திமுகவுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் இன்று மாலை அவசர அவசரமாக திமுக பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸை அழைத்தது. இதைத்தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் காங்கிரஸ் 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை சுமுகமாக இருந்தது. நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு முடிவாகும். காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது என்பதை திமுகவிடம் கூறினோம். திமுக கூட்டணியில் அனைவரும் உள்ளோம் என்ற நோக்கில்தான் ராகுல் பரப்புரை என தெரிவித்தார்.