நார்வேயில் கடந்த மாதம் இறுதி முதல் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.நார்வேயில் இதுவரை 33 ஆயிரத்திற்கு அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், வயதானோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இந்நிலையில், நார்வேயில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 23 பேர் உயிழந்துள்ளனர்.23 பேரில் 13 பேர் தடுப்பூசியால் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.தடுப்பூசி போட்டுக்கொண்ட குறுகிய காலத்திற்குள் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.எஞ்சியவர்களின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. உயிரிழந்தவர்கள் நார்வேயில் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லத்தில் வாழ்ந்த முதியவர்கள் ஆவர்.உயிரிழந்த அனைவரும் 80-வயதிற்க்கு மேற்பட்டவர்கள் ஆகும்.தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 29 பேருக்கு பக்கவிளைவுகள்,காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை சந்தித்துள்ளனர் என நார்வே அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.