அமெரிக்காவில் டெக்சாஸ் அலமோவில் உள்ள எல்லைச் சுவருக்கு பயணம் மேற்கொண்ட டிரம்ப் செய்தியாளர்களிடம் அமெரிக்க பாராளுமன்ற வன்முறை குறித்து கருத்து தெரிவித்த டொனால்டு டிரம்ப், தான் வன்முறையை விரும்பவில்லை என்றார்.நான் எந்த வன்முறையும் விரும்பவில்லை. என் மீதான இந்த குற்றச்சாட்டுகள் எனக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அவர்கள் தொடர்ந்து என்மீது குற்றம்சாட்டுகின்றனர். அது உண்மையில் அவர்கள் செய்யும் ஒரு பயங்கரமான விஷயம். கேபிடல் தாக்குதல் தொடர்பாக போராட்டத்தை தூண்டியது என்ற தொடர்ச்சியான குற்றஞ்சாட்டும் நடவடிக்கை, தனக்கு எதிரான சூழ்ச்சியின் தொடர்ச்சியாகும் என தெரிவித்தார்.