நடிகை ரகுல் பிரீத் சிங்குக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்.
ரகுல் பிரீத் சிங் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் என்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன்.
தற்போது நன்றாக உணர்கிறேன். ஓய்வுக்கு பிறகு விரைவில் படப்பிடிப்புக்கும் திரும்புவேன். என்னை சந்தித்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள் நன்றி” என்று கூறியுள்ளார்.