நடிகர் விவேக்கிற்கு மலையாள திரைப் பிரபலங்கள் இரங்கல்

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் விவேக் மறைவிற்கு மலையாளத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மோகன்லால்

நடிகர் விவேக்கின் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் மோகன்லால், விவேக் மரணமடைந்ததை அறிந்து மனமுடைந்ததாக பதிவிட்டுள்ளார்.

மம்முட்டி

“சினிமா வாழ்க்கை முழுவதும் எங்களை சிரிக்க வைத்த ஒருவர் விவேக், உங்கள் இழப்பு உண்மையிலேயே மனமுடைய வைத்துவிட்டது” என தெரிவித்துள்ளார்.

பிருத்விராஜ்

“ஆழ்ந்த இரங்கல் விவேக் சார். உங்களுடன் பணிபுரிந்தது பாக்கியம். உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது பிரார்த்தனைகள் மற்றும் இரங்கல்” என பதிவிட்டுள்ளார்.

துல்கர் சல்மான்

“ஆழ்ந்த இரங்கல் விவேக் சார். உங்களைத் திரையில் பார்க்கும் போதெல்லாம், உங்களை நன்றாகத் தெரிந்த ஒருவர் போலவே உணர வைக்கும். உண்மையிலேயே மனமுடைய வைத்துவிட்டது” என குறிப்பிட்டுள்ளார்.

நிவின் பாலி

“ஆழ்ந்த இரங்கல் விவேக் சார், உங்களை மிஸ் செய்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.

இதேபோல் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர், நடிகர் டொவினோ தாமஸ் ஆகியோரும் நடிகர் விவேக்கின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *