நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் குஷ்பு, ஸ்ரீபிரியா தோல்வி! சினிமா கை கொடுக்கவில்லை

தமிழக சட்டசபை தேர்தலில் சினிமா நடிகைகளும் களம் இறங்கினார்கள். நடிகை குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளராக போட்டியிட்டார்.மயிலாப்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளராக நடிகை ஸ்ரீபிரியா களம் இறங்கினார்.

இருவருமே தொகுதி முழுவதும் போட்டி போட்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர். குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் பம்பரமாக சுழன்று தெரு தெருவாக சென்று ஓட்டு வேட்டையாடினார். அவருக்கு ஆதரவாக அ.தி.மு.க.வினரும் ஓட்டு வேட்டையாடினார்கள்.மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா குஷ்புவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார். சினிமா செல்வாக்கு இருந்த நிலையிலும் முக்கிய தலைவர்கள் பிரசாரம் செய்தும் குஷ்புவால் வெற்றி பெற முடியவில்லை. அவர் தோல்வி முகத்தில் உள்ளார்.

மயிலாப்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ஸ்ரீபிரியாவும் தொகுதி முழுவதும் சென்று தீவிர பிரசாரம் செய்தார். அவருக்கு ஆதரவாக கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசனும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.சினிமாவில் புகழ் பெற்ற ஸ்ரீபிரியாவுக்கு சினிமா செல்வாக்கு அரசியலில் எடுபடவில்லை. அவரும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தோல்வி முகத்திலேயே இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *