ரஸ்ய ஜனாதிபதியுடனான முதலாவது தொலைபேசி உரையாடலின் போது பைடன் இந்த எச்சரிக்கையை விடுத்தாக வெள்ளை மளிகை செய்திகள் தெரிவிக்கின்றன .மேலும் தேர்தல்களில் தலையிடுவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஸ்ய ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும் எங்களிற்கோ அல்லது எங்கள் சகாக்களுக்கோ பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ரஸ்யாவின் நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்கா தனது தேசிய நலன்களை பாதுகாப்பதற்காக உறுதியாக செயற்படும் என பைடன் புட்டினிடம் தெரிவித்தார் என வெள்ளை மாளிகை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.இரு தலைவர்களும் சைபர் தாக்குதல்கள் குறித்தும் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படையினரை கொல்வதற்கு ரஸ்யா சன்மானம் வழங்குவது குறித்தும் ஆராய்ந்தனர் எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.ரஸ்ய எதிர்கட்சி தலைவர் விவகாரம் குறித்தும் இரு தலைவர்களும் ஆராய்ந்துள்ளனர்.இரு நாடுகள் மத்தியிலான உறவுகளை சுமூகமாக்குவது இரு நாடுகளினதும் நலன்களிற்கும் உகந்த விடயம் என புட்டின் தெரிவித்தார் என ரஸ்யா தெரிவித்துள்ளது.இரு நாடுகளின் அணு ஆயுதக் களஞ்சியங்களில் போர்க்கப்பல்கள், ஏவுகணைகள் மற்றும் ஏவுகணைகளின் அளவைக் கட்டுப்படுத்தும் ஒபாமா கால உடன்படிக்கையான நியூ ஸ்டார்ட் ஒப்பந்தம் குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர்.இது பிப்ரவரி 5 ஆம் தேதியுடன் முடிவடையவிருந்தது, ஆனால் இரு தரப்பினரும் செவ்வாய்க்கிழமை அழைப்பின் போது ஒப்பந்தத்தை நீட்டிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.எவ்வாறாயினும், டிரம்ப் நிர்வாகம் அதில் கையெழுத்திட மறுத்து, நீட்டிப்பு குறித்து பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது.புதன்கிழமை, ரஷ்யாவின் பாராளுமன்றம் இந்த ஒப்பந்தத்தின் ஐந்தாண்டு நீட்டிப்புக்கு ஒப்புதல் அளித்தது. உலகளாவிய பதட்டங்களைக் குறைப்பதற்கான இந்த நடவடிக்கை “சரியான திசையில் ஒரு படி” என்று புடின் கூறினார்.மேலும் புட்டின் பைடனிற்கு வாழ்த்து தெரிவித்தார் எனவும் ரஸ்யா தெரிவித்துள்ளது.