துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 61,028 ஆக பதிவாகி உள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 43,84,624 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கொரோனா பாதிப்பு காரணமாக 346 பேர் உயிரிழக்க, கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 36,613 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து இதுவரை 37.92 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். தற்போது 5.55 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.