திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 3, மனிதநேய மக்கள் கட்சி – 2, விடுதலை சிறுத்தைகள் – 6, இந்திய கம்யூனிஸ்ட் – 6, மதிமுக – 6, காங்கிரஸ் – 25 ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையேயான தொகுதி பங்கீட்டில் கடந்த ஒரு வாரமாக இழுபறி நீடித்து வந்தது.
இதற்கிடையில், திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் அடங்கிய குழு இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்த பேச்சுவார்த்தை நடத்தியது.
அந்த பேச்சுவார்த்தையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.