கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். கொளத்தூரில் 3-வது முறையாக போட்டியிடும் நிலையில் தற்போது மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:- தேர்தல் பரப்புரையில் திமுகவினர் கன்னியக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி விடக்கூடாது. தேர்தல் பிரச்சாரத்தில் கண்ணியம் காக்க வேண்டும்.
மேலும், திமுகவின் மரபையும் மாண்பையும் மனதில் வைத்து செயல்பட தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுகவினரின் பேச்சுக்களை திரித்து வெட்டி – ஒட்டி தவறான பொருள்படும்படி வெளியிடுகிறார்கள். அவர்களது எண்ணம் ஈடேறாத வகையில் கவனத்துடன் சொற்களை பயன்படுத்த வேண்டும் என்றும், கண்ணியக்குறைவான பேச்சுக்களை கட்சித் தலைமை ஒருபோதும் ஏற்காது, உணர்ச்சிவசப்பட்டு கண்ணியக்குறைவான பேச்சுக்களை பேசக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.