ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவின் அதிபர் ஜான் மகுபலி காலமானார்.கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக எந்தவொரு பொது நிகழ்ச்சியில் எதுவும் கலந்து கொள்ளாமல் ஜான் மகுபலி இருந்தார். இதனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக யூகங்கள் பரவின.இந்நிலையில், ஜான் மகுபலி உயிரிழந்ததாக தான்சானியா நாட்டு துணை அதிபர் சமியா சுலுஹு ஹாசன் அறிவித்தார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 12-ம் தேதி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். இருதய பாதிப்புக்கு மார்ச் 12-ம் தேதி முதல் ஜான் மகுபலி சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில் திடீரென நெரிசல் ஏற்றட்டது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. அதிபர் இதயம் தொடர்பான நோயால் உயிரிழந்துள்ளார் என்று அரசு தெரிவித்தாலும், எதிர்க்கட்சி தலைவர்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்ததாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.