தலிபான்கள் தாக்குதலில் 10 ஆப்கானிஸ்தான் பொலீசார் பலி

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. முடிவில்லாமல் நீளும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர இருதரப்பும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கத்தார் தலைநகர் தோகாவில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இதுவரை ஏற்படாத நிலையில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. ராணுவ வீரர்களையும் போலீசாரையும் குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதே சமயம் அவர்களை ஒடுக்கும் விதமாக ராணுவமும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள லஷ்கர்கா நகரில் இன்று போலீசார் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலில் சாங்கின் மாவட்ட காவல்துறைத் தலைவர் அப்துல் முகமது சர்வாரி உள்பட 10 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

270 பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் பிப்ரவரியில் நாடு முழுவதும் நடந்த பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் கொல்லப்பட்டனர் மற்றும் 173 பேர் காயமடைந்தனர்.
பிப்ரவரி மாதம் ஆப்கானிஸ்தானில் சாலையோர வெடிகுண்டு இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்கள் மற்றும் தலிபான் தாக்குதல்கள் உள்ளிட்ட 166 சம்பவங்கள் நடந்து உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *