தமிழ், கேரளா, பெங்காலி, நேபாளி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

தமிழ் புத்தாண்டு (சித்திரை 1) இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் விஷூ வருடப்பிறப்பு கொண்டாடப்படுகிறது. அதேபோல், இந்தியா முழுவதும் பல்வேறு மொழி பேசும் சமூகங்கள் அவரவர் மொழிகளில் தங்கள் பாரம்பரிய புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.

இதேபோல், இந்தியா மட்டுமின்றி தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பல தரப்பட்ட சமூகங்களும் அவரவர் மொழிகளில் புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.இந்நிலையில், தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் புத்தாண்டு கொண்டாடும் தமிழ், கேரளா உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், வைஷாகி, நவராத்திரி, சாங்ரன் மற்றும் வரும் வாரத்தில் புத்தாண்டு கொண்டாடும் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய சமூக மக்களுக்கு நானும் ஜில்லும் (பைடனின் மனைவி) வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இனிய பெங்காலி, கம்போடியன், லியோ, மியான்மரிஸ், நேபாளி, சின்ஹலிசி, தமிழ், தாய் (தாய்லாந்து), விஷூ புத்தாண்டு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *