சமீபத்தில் தமிழக அரசு 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் நடத்த அனுமதி அளித்திருந்தது , இதனால் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் உள்ளிட்ட திரைப்படங்கள் 13,14 ஆம் தேதி 100 சதவீத இருக்கைகளுடன் வெளியாக இருந்தது.
![](https://kannitamil.com/wp-content/uploads/2021/01/Master-Vijay-Andrea.jpg)
இந்த நிலையில் தமிழக திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்திருப்பது விதிமுறை மீறல். மத்திய அரசு வெளியிட்ட கொரோனா வழிமுறைகளை கடைபிடிக்காதது ஏன்? எனவும் மத்திய அரசின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
![](https://kannitamil.com/wp-content/uploads/2021/01/Eswaran11-1-1024x512.jpg)
இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளதால்
மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் உள்ளிட்ட திரைப்படங்களின் வசூல் பாதிக்கப்படும் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.