தமிழகத்தில் 3 மாவட்டங்களில் அரசு முறை பயணம்-என்னை சந்திக்க முயற்சிப்பதோ, வரவேற்பு அலங்காரம் அமைக்கவோ கூடாது- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழகத்தில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை-எளிய மக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளைப்போக்கும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தமிழக அரசின் கடுமையான உழைப்பினால், கொரோனா வைரஸ் தொற்று பரவலின் சங்கிலியை உடைக்கும் முயற்சியில் ஓரளவு நல்ல பலன் கிடைத்துள்ளது.திருச்சி, தஞ்சை, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் நாளை முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். இது முழுக்க முழுக்க அரசு முறை பயணம்.எனவே என்னை சந்திக்க முயலுவதோ, அல்லது வரவேற்பு அலங்காரம் அமைக்கவோ கூடாது.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *