தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் அலை வீசி கொண்டிருக்கிறது. தேர்தலில் தி.மு.க. அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்-திருமாவளவன்

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். தனது சொந்த ஊரான அரியலூர்-பெரம்பலூர் மாவட்டத்தை உள்ளடக்கிய குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செந்துறை அருகேயுள்ள அங்கனூர் கிராமத்திற்கு இன்று காலை வந்தார்.

அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நீண்ட வரிசையில் நின்று தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் அலை வீசி கொண்டிருக்கிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். தி.மு.க. கூட்டணி நூற்றுக்கு நூறு வெற்றி பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *