தமிழக அரசு அறிவித்தபடி பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் நாளை முதல் ரூ.2,500 பணத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது.நாளை முதல் ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் ரூ.2,500 பணம் மற்றும் பொங்கல் பொருட்கள் கொடுக்கப்பட உள்ளது.
காலையில் 100 பேர்களுக்கும், மாலையில் 100 பேர்களுக்கும் பொருட்கள் வழங்க ரேஷன் கடைகளில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவதை தவிர்க்க டோக்கன்களில் நாள், நேரம் ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே 4-ந் தேதிக்குரிய டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே நாளை பொருட்கள் வழங்கப்படும்.
மற்றவர்களுக்கு எந்தெந்த தேதியில் குறிப்பிடப்பட்டுள்ளதோ அந்த தேதியில் சென்றால்தான் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.