தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடிய ஹிந்தி நடிகர் சல்மான் கான்

ஹிந்தி நடிகர் சல்மான்கான் இவர் 100-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

இவர் மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் 1965 ஆம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி பிறந்தார். இவர் தனது நடிப்பு திறனால் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில், நடிகர் சல்மான் கான் இன்று (டிசம்பர் 27) தனது 55-வது வயதில் அடியெடுத்துவைக்கிறார். தனது பிறந்தநாளையொட்டி நேற்று இரவே மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள தனது பண்ணைவீட்டிற்கு சல்மான் கான் சென்றார்.

அங்கு தனது நண்பர்கள் மற்றும் பாலிவுட் துறையினருடன் இணைந்து சல்மான் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *