இயக்குனர் விக்னேஷ் சிவன் சிம்புவின் போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில், இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தனது காதலி நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், லவ் யூ தங்கமே என குறிப்பிட்டு காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.