பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழர்கள் அனைவரினதும் குடும்பத்தில் ஒருவரானார் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா. இவர் இலங்கையில் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் பின் பல படங்களிலும் நடித்து வந்த லாஸ்லியாவுக்கு இடியாய் வந்த செய்தி அவரின் பாசமிகு தந்தையின் மரணம்.
இவரது தந்தை மரியநேசன் கடந்த தீபாவளி அன்று கனடாவில் உயிரிழந்தார்,
இவருக்கு தந்தை மீது எவ்வளவு பாசம் என்பதை நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை பிக்பாஸ் நிகழ்ச்சி பார்த்த அனைவருக்கும் தெரியும்.
தந்தையின் மரணத்தால் நிலைகுலைந்திருந்த லாஸ்லியாவின் தந்தை உடல் கொரோனா காரணத்தால் ஒரு மாதத்தின் பின் தான் இலங்கையில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் வந்தடைந்தது .
இதனால் லாஸ்லியா குடும்பம் கடும் துன்பத்தில் இருந்தனர்.அதன் பின் அனைத்து சடங்குகளும் முடிந்த நிலையில் தற்போது லாஸ்லியா அப்பா இறப்பில் இருந்து கொஞ்சம் வெளியே வந்திருப்பதாக தெரிகிறது.நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது இன்ஸ்டா பக்கத்தில் நம்பிக்கை என பதிவு செய்து ஒரு புகைப்படம் போட்டுள்ளார்.