டிராவை நோக்கி செல்லும் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட்

இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டண் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 378 ரன் குவித்தது. டிவான் கான்வே இரட்டை சதம் (200ரன்) அடித்தார். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்து இருந்தது.

3-வது நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது.தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 275 ரன் எடுத்து ஆல்அவுட் ஆனது. இது நியூசிலாந்து ஸ்கோரை விட 103 ரன்கள் குறைவாகும்.இங்கிலாந்து தரப்பில் தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 132 ரன்னும், கேப்டன் ஜோ ரூட், ராபின்சன் தலா 42 ரன்களும் எடுத்தனர்.

நியூசிலாந்து வேகப்பந்து வீரர் சவுத்தி 43 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். ஜேமிசன் 3 விக்கெட்டும், வாக்னர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.103 ரன்கள் முன்னிலையில் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சை ஆடியது. நேற்றைய ஆட்டநேர முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன் எடுத்து இருந்தது. தற்போது நியூசிலாந்து 165 ரன்கள் முன்னிலையில் உள்ளது. கைவசம் 8 விக்கெட் இருக்கிறது.

தொடக்க வீரர் கான்வே 23 ரன்னிலும், கேப்டன் வில்லியம்சன் ஒரு ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். மற்றொரு தொடக்க வீரர் டாம் லாதம் 30 ரன்னிலும், வாக்னர் 2 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இரு அணிகளும் இன்னும் ஒரு இன்னிங்சை ஆட வேண்டியுள்ளது. இதனால் இந்த டெஸ்ட் டிராவில் முடிகிறது.

இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 10-ந்தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது. இந்த தொடருக்கு பிறகு நியூசிலாந்து அணி இந்தியாவுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விளையாடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *