கடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் கொரோனா தொற்றால் மேலும் 1244 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று புதிதாக தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 25,164ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றையதை விட அதிகமாகும் என்று ரொபேர்ட் கோஹ் நிறுவனம் தெரிவித்துள்ளது .
அத்துடன்5185 பேர் கொரோனா தொற்றால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
மேலும் ஜேர்மனியில் இதுவரை758,000 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது