கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான கட்டுமானப்பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே 8-ந் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கிவைத்தனர்.இந்நிலையில் தற்போது நினைவிடப் பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் பார்வையிடுவதற்காக இன்று காலை 11 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் கலந்துகொள்ள ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் வந்துள்ளனர்.