முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த மர்மத்தை வெளியிட இயலாத அ.தி.மு.க ஆட்சியாளர்கள், அவரது நினைவிடத்தை திறந்துவைக்க இருக்கிறார்கள். ஜெயலலிதா நினைவிடத்தை திறப்பது தேர்தலுக்காக அரங்கேற்றப்படும் அரசியல் நாடகம்.ஜெயலலிதா மரணத்தின் உண்மையை வெளிச்சத்திற்கு வருவதை தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்கிறது எடப்பாடி அரசு. துணை முதல்வரான பிறகும் ஜெயலலிதா மரணத்துக்கான உண்மையை அறிய முற்பட்டாரா ஓபிஎஸ் என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.ஜெயலலிதாவின் உயிருக்கு உரிய நீதி வழங்க முன்வராத எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் நினைவிடத்தை திறக்க உரிமை உள்ளதா? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார் திமுக தலைவர் முக ஸ்டாலின்.