மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தி.நகரில் உள்ள இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு சசிகலா மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தொண்டர்களுக்கு இனிப்புகளை சசிகலா வழங்கினார்.
இதன் பின்னர் தொண்டர்களிடையே பேசிய சசிகலா, ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றாக இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திப்போம். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்று தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும் விரைவில் தொண்டர்களையும், மக்களையும் சந்திப்பேன் என கூறினார்.சசிகலாவுடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடன் இருந்தார்.