தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் தற்போது பூமி திரைப்படம் உருவாகி உள்ளது இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக திரிஷா நடித்து இருக்கிறார் . இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.இந்நிலையில், ஜெயம் ரவியின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி அடுத்து பூலோகம் பட இயக்குனர் கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.