ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டுவரப்படும் – பிரித்தானிய தூதுவர் சுமந்திரனிடம் உறுதி

ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகப் புதிய பிரேரணை ஒன்று கொண்டுவரப்படும் என்றும்,

அதன் உள்ளடக்கம் மற்றும் அதற்கான ஆதரவுத் தளம் என்பன தொடர்பில் ஜனவரி மாதம் தீர்மானிக்கப்படும் என்றும்

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனிடம் இன்று வாக்குறுதி வழங்கியுள்ளார்.

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் மற்றும் ஐ.நாவின் இலங்கைக்கான நிரந்தரப் வதிவிடப் பிரதிநிதி ஆகியோருடன் இன்று நேரில் நடத்திய சந்திப்புகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. மேற்படி விடயத்தைத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *