கம்ப்யூட்டர் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் மெக்காஃபியை உருவாக்கியவர் ஜான் மெக்காஃபி. இவர் வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா அருகில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.வரி ஏய்ப்பு தொடர்பாக அவரை அமெரிக்காவிற்கு நாடு கடத்த கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் சிறைச்சாலையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கம்ப்யூட்டர் புரோகிராமர் மற்றும் தொழிலதிபரான ஜான் மெக்காஃபி, 1987-ல் மெக்காஃபி அசோசியேட்ஸ் என்ற மென்பொருள் நிறுவனத்தை நிறுவினார். 1994-ம் ஆண்டு ராஜினாமா செய்யும் வரை அந்த நிறுவனத்தை நடத்தினார்.2012-ம் அண்டு பக்கத்து வீட்டு நபரை கொலை செய்ய கூறியதாக 2019-ம் ஆண்டு அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு, 25 மில்லியன் டாலர் அபராதம் கட்ட கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் மெக்காஃபி குற்றச்சாட்டை மறுத்து, பணம் கட்ட முடியாது எனத் தெரிவித்தார்.கடந்த ஆண்டு அக்டோபர் 6-ந்தேதி ஸ்பெயின் அரசு, வரி ஏய்ப்பு தொடர்பாக கைது செய்தது.