ஈஸ்வரனின் வெற்றியை தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் திண்டுக்கல் பகுதியை சுற்றி நடந்து வந்தது. இதில் ஒரு படத்திற்கு தற்போது குற்றமே குற்றம் என்று டைட்டில் வைத்துள்ளனர். இதில் ஜெய் ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. மார்ச் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.இதுதவிர சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய், பாரதிராஜா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. இந்த படத்தை முடித்து விட்டு சிம்பு நடிக்கும் படத்தை மீண்டும் இயக்குகிறார் சுசீந்திரன்.