கொரோனா வைரசை தடுத்து நிறுத்த ஏதுவாக உலகில் பல நிறுவனங்கள் தடுப்பூசியை தயாரித்து வருகின்றனர்.
தற்போது சினோபார்ம் நிறுவனம் தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசிக்கு சீன தேசிய மருத்துவ தயாரிப்புகள் நிர்வாகம் நேற்று ஒப்புதல் அளித்தது.
இந்த தடுப்பூசியானது 79 சதவீதத்துக்கும் அதிகமான செயல்திறனை கொண்டுள்ளது என சினோபார்ம் நிறுவனத்தின் துணை நிறுவனமான பீஜிங் உயிரியல் தயாரிப்புகள் நிறுவனம் நேற்று முன்தினம் அறிவித்தது .
இந்த தடுப்பூசி ஏற்கனவே பக்ரைன், ஐக்கிய அரசு அமீரகம் ஆகியவற்றில் ஒப்புதலைப் பெற்றுவிட்டது நினைவுகூரத்தக்கது.