லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் மாஸ்டர். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் ஏகோபித்த வரவேற்பை பெற்றன. குறிப்பாக இதில் இடம்பெறும் வாத்தி கம்மிங் பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பி வருகிறது.
இந்நிலையில், வாத்தி கம்மிங் பாடல் வீடியோ, யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக #VaathiComing100MViews என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்டாக்கி உள்ளனர். ஏற்கனவே வாத்தி கம்மிங் பாடலின் லிரிக்கல் வீடியோவும் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.
இதுவரை எந்த ஒரு பாடலின் லிரிக்கல் வீடியோவும், வீடியோ பாடலும் தனித்தனியே 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்ததில்லை. தற்போது வாத்தி கம்மிங் பாடல் அந்த உச்சத்தை தொட்டு புதிய சாதனையை படைத்துள்ளது.
Most viral & popular song in recent times – 100 mil views crossed by the song video too (lyric video also crossed this vera level milestone and is nearing 125 mil views) 👌🔥 #ThalapathyVijay – @anirudhofficial magic – the social media #Master s! pic.twitter.com/fUQcd1BHsT
— Kaushik LM (@LMKMovieManiac) March 21, 2021