ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.இன்றைய போட்டியில் சிறப்பாக ஆடி வந்த லபுசாக்னே, மாத்யூ வேட் கூட்டணியை உடைத்து தமிழகத்தை சேர்ந்த நடராஜன் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார். களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே விக்கெட் வீழ்த்தி நடராஜன் அசத்தியுள்ளார்.பிரிஸ்பேன் டெஸ்ட் லாபஸ்சேன் சதத்தால் ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 274/5 எடுத்தது குறிப்பிடத்தக்கது.
You are Here
- Home
- விளையாட்டு
- சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார்