கொரோனாவின் இரண்டாவது அலை, தமிழகத்தில் பல வகையில் தாக்கி வருகிறது.அதிலும் திரையுலகை சேர்ந்த பலரும் கொரோனா காரணமாக மரணமடைந்து வருகிறார்கள்.இதனால் வேகமாக பரவி வருகிற நிலையில் தொற்று சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.இதையடுத்து தமிழ் திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் பலரும், தங்களால் முடிந்த தொகையை நிதியாக வழங்கி வருகின்றனர்.அந்த வகையில் தற்போது சன் நிறுவனத்தின் சார்பில் கலாநிதி மாறன் ரூ. 10 கோடியை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.