கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான இரண்டாவது அலையை வீழ்த்துவதற்காக நாடு தீவிரமாக போராடி வருகிறது. இந்த போராட்டத்தில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதுவரை 2,87,122 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.இந்நிலையில் இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்ட செய்தியில்,நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் போது மொத்தம் 329 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலும் 30 முதல் 55 வயதுக்குள்பட்டவர்கள் ஆவார். அதில் அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் 80 மருத்துவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
