கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்யும் அரசாங்கத்தின் முயற்சி கைவிடப்பட்டது.

கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்யும் அரசாங்கத்தின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இலங்கையும் மாலைதீவும் எந்த காரணங்களையும் தெரிவிக்காமல் இந்த திட்;டத்தை கைவிட்டுள்ளன என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்யும் நடவடிக்கையினால் இரு நாடுகளும் பல அரசியல் சர்வதேச விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும் எனபதை இருநாடுகளும் உணர்ந்திருக்கலாம்
இதற்கு அப்பால் மாலைதீவில் இதற்கு எதிர்ப்பு அதிகமானதாக காணப்பட்டது.
இலங்கைஅரசாங்கத்தின் வேண்டுகோளால் ஏற்படக்கூடிய பல விளைவுகள் குறித்து ஆராய்ந்துள்ளதாக மாலைதீவின் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையில் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதால் ஏற்படக்கூடிய விளைவு குறித் து நன்கு ஆராய்ந்த பின்னரே மாலைதீவு அரசாங்கம் பின்வாங்கியது என இந்த விடயம் குறித்து நன்கு அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மாலைதீவு இன்னொரு நாட்டின் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கான இடுகாடு என அடையாளம் காணப்பட்டால் நாட்டின் சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு ஏற்படலாம் என அந்த நாட்டின் சுற்றுலாத்துறையினர் அச்சம் வெளியிட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *