அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வான கமலா ஹாரிஸ் மற்றும் அவரது கணவர் ஆகியோருக்கு கொரோனா தடுப்புக்கான மாடர்னா மருந்தின் முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டது.
அப்போது பேசிய கமலா ஹாரிஸ், தடுப்பூசி போட்டுக் கொள்வது மிக எளிதானது. நன்றி, அதனை அனைவரும் எடுத்துக் கொள்ளுங்கள்.
இரண்டாவது தடுப்பூசி பெற ஆவலுடன் காத்திருக்கிறேன். உண்மையில் இது உயிர்களைக் காப்பாற்றுவதாகும். நான் விஞ்ஞானிகளை நம்புகிறேன்,
விஞ்ஞானிகள் தடுப்பூசியை உருவாக்கி ஒப்புதல் அளித்ததால் நான் அவர்களை நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
கடந்த 22-ம் தேதி அதிபராக தேர்வான ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது .