வெளிநாட்டில் சிக்கியுள்ள இலங்கையரை நாடு கொண்டுவரும் அரசின் திடத்தின் கீழ்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 35 பேர், மலேசியாவிலிருந்து 14 பேர், கட்டாரிலிருந்தும் 119 பேர் மற்றும் இந்தியாவிலிருந்து 55 பேர் ஆகியோர் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்த டைந்ததாக கொரோனா தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப் பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது .