நீண்ட இழுபறிக்குப்பின் திமுக – விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.மேலும் அவர் செய்தியாள்களிடம் தெரிவிக்கையில் 6 தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிடும் என்றார்.திமுக கூட்டணியில் விசிக – 6, ஐ.யூ.எம்.எல். – 3, ம.ம.க. – 2 ஆகிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.திமுக கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.