குவைத்தில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.இலங்கையர்கள் ஆயிரக்கணக்கானோர் பணி நிமித்தமாக வெளிநாடு சென்றவர்கள் இலங்கைக்கு வர முடியாமல் அங்கு சிக்கியுள்ளனர் இந்நிலையில் வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கைப் பணியாளர்களை நாட்டிற்கு அழைத்து வரும் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.இதன் கீழ் குவைத் நாட்டில் தங்கியிருக்கும் சுமார் 5 ஆயிரம் பணியாளர்களை இலவசமாக நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருப்பதாக ராஜாங்க அமைசசர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார்.இந்தத் திட்டத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியிருப்பவர்களை அழைத்து வருவதற்கு முன்னுரிமை வழங்குவதாக ராஜாங்க அமைசசர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்திருக்கின்றார்.இதன் பிரகாரம் மத்திய கிழக்கில் தங்கியிருக்கும் சுமார் 22 ஆயிரத்து 500 பேரை அழைத்து வரப்படவிருப்பதாகவும் ராஜாங்க அமைசசர் பிரியங்கர ஜயரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *