ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான குரோசியாவில் நேற்று 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலடுக்கம் ஏற்பட்டது.
தலைநகரின் தென்கிழக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர். 20க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும் பலர் மாயமாகி உள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
குரோசியால் ஏற்பட்ட நிலநடுக்கம் செர்பியா மற்றும் போஸ்னியாவிலும் உணரப்பட்டது.